Tuesday, October 24, 2017

இஸ்லாம் என்பது சட்டங்களின் மதம் அல்ல காதலின் மதம்

இஸ்லாம் என்பது சட்டங்களின் மதம் அல்ல காதலின் மதம் என்று சொன்னார் செய்குல் அக்பர் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த மதம் தீவிரவாதமாக போனதன் காரணம் சூபியிசத்தை இஸ்லாத்துக்கு வேறாக்கியது தான்.காதலை இப்னு அரபி நான்காக பகுக்கிறார்.
1)அல் ஹுப் அல் இலாஹி (இறைக்காதல்)
2)அல் ஹுப் அல் ரூஹானி
(ஆன்மக்காதல்)
3)அல் ஹுப் அல் தாபி(இயற்க்காதல்)
4)அல் ஹுப் அல் அன்சூரி(மூலக்காதல்)

காதல் என்பது அரபியில் அல்ஹுப் (காதல்) அல் ஹவா (விருப்பம்) அல் இஸ்ஹ் (ஒன்றுகலந்த காதல்) அல் உத் (பாசம்) என்ற சொல்லாடல்களை கொண்டது.
இறைக்காதலர்களிடன் ஏழுவித குணங்கள் உண்டு.(நூத் அல் முஹிப்பீன்)
1)அல் நிஹுல்/உருகுதல்
2)அல் திபுல்/வாடுதல்
3)அல் ஹரம்/இச்சித்தல்
4)அல் சவ்ஹ்/உவத்தல்
5)அல் ஹுயம்/காதலித்தல்
6)அல் சப்ரத்/பெருமூச்செறிதல்
7) அல் ஹமத்/வருத்துதல்
மேலும் இறைக்காதலர்களை ஆஷிக்கின்கள் என்றழைப்பார்கள்.இவர்கள் 58 வகை இறைக்காதலை கொண்டிருப்பார்கள்.இப்படி இப்னு அரபி தமது புகழ்மிக்க புதுஹாத்துல் மக்கியா அத்தியாம் 178 ல் விலாவாரியாக காதலை வியாக்கியானிக்கிறார்.உலகில் காதலை மிக பிரமாண்டமாக வியாக்கினாத்தியவர் வேறு யாரும் இல்லை.இத்தகைய குணாம்சம் கொண்ட காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தமதமும் இஸ்லாம் தான்.ஆனால் வஹாபிசம் தோன்றிய பிறகு வரலாறுகள் மாற்றியமைக்கப்பட்டது.காதலி்ன் மதம் இன்று வெறுப்பின் மதமாக பார்க்கப்படுகிறது.

No comments:

பேயும் பயமும்

பேயும் பயமும் மறுப்பதற்கு ஆண்மையுள்ள பயம் என்பது நம் இருப்பின் ஒரு பகுதி அல்லவா? பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது இன்றைய அரச...